உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தி.மு.க.,வின் தேர்தல் விதிமீறல்களுக்கு துணை செல்லும் அரசு அலுவலர்கள்

தி.மு.க.,வின் தேர்தல் விதிமீறல்களுக்கு துணை செல்லும் அரசு அலுவலர்கள்

தர்மபுரி: ''தி.மு.க.,வின் தேர்தலின் விதிமீறல்களுக்கு, அரசு அலுவலர்கள் துணை செல்கின்றனர்,'' என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் கூறினார்.இதுகுறித்து அவர், தர்மபுரியில் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி லோக்சபா, தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், ஹிந்து மதத்தினரை புண்படுத்தி, ஹிந்துகளுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்பும், தி.மு.க.,வினரின் தேர்தல் விதிமீறல்களுக்கு, அரசு அலுவலர்கள் துணை செல்கின்றனர். தி.மு.க., அரசு தேர்தலில் வெற்றி பெற, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது. போதை பொருள் மற்றும் மணல் மாபியாக்களிடம் பெற்ற பணத்தை வைத்து, தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என, தி.மு.க., நினைத்துள்ளது. தேர்தல் வரை கவர்னர், தி.மு.க., அரசை முடக்கி வைக்க வேண்டும். ராணுவத்தை வைத்து, தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி ஜனநாயக முறையில் தேர்தல் நடத்த வேண்டும். பிரதமர் மோடி, தமிழகத்துக்கு வழங்கிய திட்டப்பணிகள் குறித்து, பொதுமக்களிடம் திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுவோம். பொதுமக்களுக்கு எதிராக, தி.மு.க., எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடம் கொண்டு செல்வோம். வி.சி., கட்சியின் நோக்கம் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பது தான். திருமாவளவன் எப்போதும் சனாதன எதிர்ப்பை மட்டுமே பேசி, ஹிந்து சமயத்தை அழிப்பதற்காக செயல்படுகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை