உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு கல்லூரியில் சேர்க்கை கலந்தாய்வு

அரசு கல்லூரியில் சேர்க்கை கலந்தாய்வு

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக் கல்லுாரி முதல்வர் அன்பரசி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை கல்லுாரியில் 2024 - -2025ம் கல்வியாண்டிற்கான இளங்கலை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று, 28 முதல் நாளை மறுநாள், 30 வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும். சேர்க்கையின்போது மாணவர்கள், 7 ஆவணங்களை, 3 நகல்களாக கொண்டுவர வேண்டும். விண்ணப்பப் படிவம், அசல் மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உட்பட, தங்கள் பெற்றோருடன் வர வேண்டும். சேர்க்கை கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்தவர்களின் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், கல்லுாரி தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், கல்லுாரியின், www.gascprp.edu.in என்ற இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ