மேலும் செய்திகள்
பெண்களுக்கு வன்முறை: விழிப்புணர்வு நிகழ்ச்சி
26-Nov-2024
தர்மபுரி, டிச. 26-மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், நல்லம்பள்ளி அருகே உள்ள, தனியார் கல்லுாரியில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார அளவில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், கல்லுாரி மாணவியருக்கான சுகாதார மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி, திட்ட இயக்குனர் லலிதா, கல்லுாரி முதல்வர் தண்டபாணி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மகளிர் திட்டம் மாவட்ட பயிற்றுனர் பெருமாள், கல்லுாரி மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வியாதிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், உதவி திட்ட அலுவலர் முத்துப்பாண்டி, கல்லுாரி பேராசிரியர்கள், வட்டார இயக்க மேலாளர் அறிவழகன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
26-Nov-2024