உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில், தர்மபுரி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இளங்கோவன், மாவட்ட பொருளாளர் கணேஷ் குமார், முன்னாள் மண்டல செயலாளர் முனிராஜ் ஆகியோர் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையில் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு, அரசே எடுத்து நடத்த வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி, 1,000க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்து, பணி நியமனத்திற்காக காத்திருக்கின்றனர். அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பு நிகழ்வாக அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையிலுள்ள அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் போன்ற காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ