உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / முதல்முறை வாக்காளர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை

முதல்முறை வாக்காளர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை

தர்மபுரி: முதல் முறையாக ஓட்டளிப்பவர்கள் நேற்று ஆர்வத்துடன், ஓட்டுச்சாவடிகளில் ஓட்டளித்தனர். முதல்முறை ஓட்டு போட வந்த வாக்காளர்களுக்கு பரிவட்டம் கட்டி, ரோஜா பூ கொடுத்து வரவேற்று கவுரவிக்கப்பட்டனர்.தமிழகம் முழுவதும் நேற்று ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடந்தது. தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு, 18 முதல், 19 வயதுக்கு உட்பட்ட, வாக்காளர்கள். 32 ஆயிரத்து, 535 பேர் என மொத்தம், 15 லட்சத்து, 24 ஆயிரத்து, 896 வாக்காளர்கள் உள்ளனர்.மாவட்டம் முழுவதும் வாக்காளர்கள் காலை, 7:00 மணி முதல் ஓட்டுச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். தர்மபுரி உட்பட அனைத்து பகுதிகளிலும், முதல்முறையாக ஓட்டளிக்கும் வாக்காளர்கள் ஆர்வத்துடன், ஓட்டுச்சாவடிகளுக்கு வந்து ஓட்டளித்து சென்றனர். தர்மபுரி, சாலை விநாயகர் கோவில் சாலையில் உள்ள அரசு பள்ளிக்கு முதன் முறையாக ஓட்டளிக்க வந்த பெண் வாக்காளருக்கு, தர்மபுரி டி.ஆர்.ஓ., பால் பிரின்ஸ்லிராஜ்குமார் பரிவட்டம் கட்டி கவுரவித்தார். அதேபோல், நல்லம்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில் ஓட்டு போட வந்த, முதல்முறை வாக்காளர்களுக்கு நல்லம்பள்ளி தாசில்தார் பார்வதி ரோஜா பூ கொடுத்து வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !