உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தம்பியை கொன்ற அண்ணனுக்கு ஆயுள்

தம்பியை கொன்ற அண்ணனுக்கு ஆயுள்

தர்மபுரி, நல்லம்பள்ளி தாலுகா, கந்துகால்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சித்தன், 55. இவரின் அண்ணன் சீனிவாசன், 65. இருவருக்கும் நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த, 2020 ஜன., 1ம் தேதியன்று விவசாய நிலத்திற்கு சென்ற சித்தனை, அண்ணன் சீனிவாசன் கத்தியால் குத்தினார். படுகாமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சித்தன், 2020 ஜன., 14ல் இறந்தார். அதியமான்கோட்டை போலீசார், சீனிவாசனை கைது செய்தனர். இந்த வழக்கு, தர்மபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், சீனிவாசன் குற்றம் செய்தது உறுதியானதையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும், 5,000- ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மோனிகா தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சக்திவேல் ஆஜரானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ