| ADDED : டிச 29, 2025 10:05 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே தீர்த்தமலை பஞ்., குரும்பட்டியை சேர்ந்தவர் வேலாயுதம், 85; விவசாயி; இவரின் மனைவி மீனா, 75; தோட்-டத்து வீட்டில் தனியாக வசிக்கின்றனர். குழந்-தைகள் இல்லை. நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு, இயற்கை உபாதை கழிக்க சென்ற வேலாயுதத்தை, முகமூடி அணிந்த இருவர் வாயை பொத்தியுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த மீனா கூச்சல் போட்டுள்ளார். அவரது வாயையும் அமுக்கி, அவர் போட்டிருந்த ஆறரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்து தப்பினர்.தகவலறிந்து அரூர் டி.எஸ்.பி., சதீஸ்குமார் விசாரணை மேற்கொண்டார். முன்னதாக முக-மூடி கொள்ளையர்கள் இருவரும், வேலாயுதம் வீட்டருகே மது அருந்தி உள்ளனர். சம்பவத்துக்கு முன் மின்தடை ஏற்பட்டுள்ளது. முகமூடி கொள்-ளையர் மின்தடை ஏற்படுத்தினார்களா என்ற சந்-தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.வேலாயுதம் வளர்த்து வந்த நாய், ஒரு வாரத்-துக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்துள்-ளது. இதையெல்லாம் வைத்து கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.