உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எம்.எல்.ஏ., குறைகேட்பு

எம்.எல்.ஏ., குறைகேட்பு

அரூர்,அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் நேற்று கோட்டப்பட்டிக்கு சென்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அவரிடம் அப்பகுதியை சேர்ந்த குருமன்ஸ் பழங்குடி இனமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.அதில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், தங்கள் பிள்ளைகளுக்கு குருமன்ஸ் பழங்குடி இன ஜாதிச்சான்றிதழ் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.மனுக்களை அரூர் ஆர்.டி.ஓ.,விடம் வழங்கி ஜாதி சான்றிதழ் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக, எம்.எல்.ஏ., சம்பத்குமார் உறுதியளித்தார். நிகழ்ச்சியில், நிர்வாகிகள் சாமிக்கண்ணு, சரவணன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ