மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
4 hour(s) ago
கரும்பில் வேர்புழு தாக்குதல்: இழப்பீடு வழங்க கோரிக்கை
4 hour(s) ago
தவற விட்ட ரூ.15,000 உரியவரிடம் ஒப்படைப்பு
4 hour(s) ago
தர்மபுரி: மாணவர்களின் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில், நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மத்திய கல்வி அமைச்சகத்தால், ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில், அந்தந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அதன்படி, தர்மபுரி செட்டிக்கரையிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், தேசிய அளவிலான ஓவியப்போட்டி நடந்தது. போட்டிகளை பள்ளி முதல்வர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள், மாநில பள்ளிகளின் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தின் அடிப்படையிலும், கல்வி அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட கருப்பொருட்களின் அடிப்படையிலும், ஓவிய போட்டி நடந்தது. ஓய்வுபெற்ற கலை மாஸ்டர் முத்துகிருஷ்ணன், கலை மாஸ்டர்கள் இந்திரா, சிவகுமாரி, உமா மகேஸ்வரி ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர். நடுவர்களின் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 5 சிறந்த பதிவுகளுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் புத்தகங்கள், பிரதமர் நரேந்திர மோடி எழுதிய, தேர்வு வாரியர் புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பிரதமர் மோடி எழுதிய தேர்வு வாரியர் புத்தகம் வழங்கப்பட்டது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago