உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அங்கன்வாடியை சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

அங்கன்வாடியை சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

தொப்பூர்: தர்மபுரி அருகே, பழுதான நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், தொப்பூர் பஞ்.,க்கு உட்பட்ட பகுதியில், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன், 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்க வந்து செல்கின்றனர். இக்கட்டடத்தின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டும், இதன் முன் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்த நிலையிலும் உள்ளன. இதனால், மழை நேரத்தில் இந்த வளாகத்தின் முன் மழைநீர் தேங்கி சுகா-தார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், சிமென்ட் காரைகள் பெயர்ந்த இடத்தில், குழந்தைகள் நடக்க சிரமப்பட்டு வருகின்றனர். இதுகு-றித்து, பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அங்கன்வாடி குழந்தைகளின் நலன்கருதி, சேதமான நிலையிலுள்ள சிமென்ட் காரையை சீரமைக்க, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி