உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலையில் நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க மக்கள் கோரிக்கை

சாலையில் நிறுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க மக்கள் கோரிக்கை

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூரில், பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, மஜீத்தெரு மற்றும் நான்குரோடு, திரு.வி.க., நகர், கச்சேரிமேடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் முன், நான்கு வழிச்சாலையின் இருபுறமும் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், நடந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில், போலீசார் ஈடுபட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ