உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வீடுகளில் புகுந்த மழை நீரால் மக்கள் அவதி

வீடுகளில் புகுந்த மழை நீரால் மக்கள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சமத்துவபுரம் பகுதியில், 100க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அப்பகுதியில் ஏ.பள்ளிப்பட்டி - மஞ்சவாடி சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் சாலையின் இருபுறமும் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் அக் குழிகளில் தண்ணீர் நிரம்பி வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள், தங்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.இது குறித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், 'நாங்கள் சமத்துவபுரம் குடியிருப்புக்கு எதிர்புறம், சாலையோரம் எங்களது பட்டா நிலத்தில் வசிக்கிறோம். சாலையோரம் தோண்டிய குழியில் மழைநீர் தேங்கி, குடியிருப்பில் புகுந்து விடுகிறது. இதனால் எங்களால் வீட்டிலிருந்து வெளியே வர முடியவில்லை. எங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். வடியாத மழை நீரை அள்ளி ஊற்றி வருகிறோம். மழை நீர் வீட்டில் புகாத வண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி