உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பொன்மாரியம்மன் கோவில் திருவிழா

பொன்மாரியம்மன் கோவில் திருவிழா

பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த திம்லாமேடு கிராமத்தில் பொன்மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்-தினம் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், தொடர்ந்து, நேற்று அதிகாலை முதல், அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் மாவிளக்கு ஊர்-வலம் மற்றும் கரகம், தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், அம்மன் வேடமணிந்து முக்கிய வீதி-களின் வழியாக ஊர்வலமாக சென்று வேண்டு-தலை நிறைவேற்றினர். இதில், திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ