தரமற்ற சாலையில் பள்ளம்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, நாகர்கூடலில் தரமற்ற முறையில் அமைத்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் நாகர்கூடல் பஞ்., நாகர்கூடலில் இருந்து இண்டூர் மற்றும் பண்டஹள்ளி செல்லும் பிரதான சாலை உள்ளது.இதில், அரசு டவுன் பஸ்கள், பள்ளி, கல்லுாரி பஸ்கள் மற்றும் குவாரிகளுக்கு செல்லும் டிப்பர் லாரிகள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்நிலையில், நாகர்கூடலில் கடந்த, 2 ஆண்டுக-ளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை, தரமற்ற முறையில் உள்-ளதால், தற்போது சாலை மிகவும் சேதமடைந்து, 2 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் அரசு டவுன் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வரு-கின்றன.மேலும், மழை பெய்யும் சமயத்தில் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதம-டைந்த சாலையை சீரமைக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.