மேலும் செய்திகள்
அரசு குடியிருப்புகளை சீரமைக்க வேண்டுகோள்
8 hour(s) ago
தர்மபுரியில் ஓய்வூதியர் தின விழா
8 hour(s) ago
தர்மபுரியில் எஸ்.ஐ., தேர்வு 1,688 பேர் ஆப்சென்ட்
8 hour(s) ago
துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்
21-Dec-2025
தர்மபுரி : தர்மபுரியில், முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவில், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 11), தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் நடக்கும் விழாவில், தர்மபுரி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை திறந்து வைக்க உள்ளார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதில், அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.இவ்விழாவில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொள்கின்றனர். இந்த அரசு விழாவில், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டுமென, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னதாக, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து, பார்வையிட்டார்.அப்போது, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வைத்திநாதன், மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் கலெக்டர் கவுரவ்குமார், டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
21-Dec-2025