உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் கிளை சிறையில் கைதி தற்கொலை முயற்சி

அரூர் கிளை சிறையில் கைதி தற்கொலை முயற்சி

அரூர்: அரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி, கொசுவர்த்தி சுருளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 35; இவர், அரூர் மற்றும் அனுமன்தீர்த்தத்திலுள்ள கடைகளில் திருடிய வழக்கில், நேற்று முன்தினம் கைதாகி, அரூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று மதியம் அவர் கொசுவர்த்தி சுருளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை சிறைக்காவலர்கள் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு, போலீசார் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். கோவிந்தசாமிக்கு அரூர் கிளைச்சிறை பிடிக்கவில்லை எனவும், தன்னை சேலம் மத்திய சிறைக்கு அனுப்புமாறு கூறியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால், கொசுவர்த்தி சுருளை சாப்பிட்டதாக நாடகமாடுகிறார் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி