உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூரில் சாலை விரிவாக்கப் பணி குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

அரூரில் சாலை விரிவாக்கப் பணி குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

அரூர், அரூர்-திருவண்ணாமலை சாலையில், அரூர் அம்பேத்கர் நகர் முதல், உடையானுார் வரை, சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இந்நிலையில் நேற்று பொக்லைன் வாகனம் மூலம் குழி தோண்டும்போது, ராயப்பன்கொட்டாய் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், தண்ணீர் வீணாக வெளியேறி சாலை அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குளம் போல் தேங்கியது. மேலும், குழாய் உடைப்பால், அரூர் நகராட்சிக்கு உட்பட்ட ராயப்பன்கொட்டாய், உடையானுார், நாசன்கொட்டாய் ஆகிய பகுதிகளில் வசிக்கும், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு போதியளவில் குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த குழாயை சீரமைக்க உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை