உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த காற்றுடன் மழை

பாப்பிரெட்டிப்பட்டியில் பலத்த காற்றுடன் மழை

பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரத்திலுள்ள வெங்கடசமுத்திரம், மோளையானுார், சாமியாபுரம் கூட்ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பிற்பகல், 2:45 மணி முதல், 3:15 மணி வரை அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. இந்த மழையின் போது பலத்த காற்று வீசியது.இதனால் பாப்பிரெட்டிப்பட்டி - சேலம் ரோட்டில் புளியமரம் சாய்ந்தது. அதை பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் உடனடியாக அப்புறப்படுத்தினர். இந்த மழையினால் சாலையோரம், தாழ்வான பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால், பாப்பிரெட்டிப்பட்டியின் பல்வேறு இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், நேற்று காலை முதல் கடும் வெயில் காணப்பட்டது. இந்நிலையில், மதியம், 3:00 முதல், 3:30 மணி வரை அரூர், அச்சல்வாடி, வாச்சாத்தி, தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி