உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புற்று கோவிலில் பெண்கள் பால் ஊற்றி சிறப்பு வழிபாடு

புற்று கோவிலில் பெண்கள் பால் ஊற்றி சிறப்பு வழிபாடு

தர்மபுரி: தர்மபுரி அருகே உள்ள புற்று கோவிலில், ஏராளமான பெண்கள் நேற்று புற்றில் பால் ஊற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.தர்மபுரி, செந்தில்நகரில் உள்ள புற்று கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாட்களில் பெண்கள் புற்றில் பால் ஊற்றி வழிபாடு செய்வது வழக்கம். இந்நிலையில் ஆடி மாத வெள்ளிக்கிழமை நாளான நேற்று, திரளான பெண்கள் வந்து விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். தொடர்ந்து, அங்குள்ள புற்றில் பால் ஊற்றியும், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொடிகளை அதில் துாவியும் வழிபாடு செய்தனர். சிலர் நேர்த்திக் கடனாக தாலிக்கொடி மற்றும் வளையல்களை வாங்கி அம்மனுக்கு சாத்தினர். சிலர் வேண்டுதலுக்காக தாங்கள் சமைத்து கொண்டு வந்த பொங்கல், கூழ் மற்றும் பஞ்சாமிர்தத்தை பக்தர்களுக்கு வழங்கினர். செந்தில்நகர், பாரதிபுரம், இலக்கியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ