மேலும் செய்திகள்
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்
25-Jul-2025
அரூர், காரிமங்கலம் அருகே பிக்கனஹள்ளி ஊராட்சியில் நடந்த முகாம், தாசில்தார் அசோக்குமார் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., சரோத்தம்மன், தனலட்சுமி முன்னிலை வகித்தனர். காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.* பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் தாளநத்தம் மற்றும் மெனசி ஆகிய ஊராட்சிகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. தாளநத்தம் சமுதாய கூடத்தில் நடந்த முகாமில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் மனுக்கள் கொடுக்க குவிந்தனர். முகாமை, மாவட்ட கலெக்டர் சதீஷ் ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியோர், கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் அமர இடமின்றி நின்றிருந்தனர்.இதை பார்த்த கலெக்டர், அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி, தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகளிடம், பொதுமக்களின் கூட்டத்தை ஏன் நெறிப்படுத்தவில்லை, பொதுமக்கள் அமர ஏன் இருக்கை வசதி செய்யப்படவில்லை. அரசு அலுவலர்கள் அடையாள அட்டை ஏன் அணியவில்லை. மக்களுக்கு யார் அதிகாரி என எப்படி தெரியும் எனக்கேட்டு கடிந்து கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மெனசியில் நடந்த முகாமில் ஆதார் அட்டை எடுக்க மக்கள் குவிந்தனர். ஆனால், ஆதார் அட்டை எடுக்கும் மிஷன் பழுதானதால், மக்கள் தவித்தனர்.
25-Jul-2025