உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை

பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை

கரூர், சின்னதாராபுரம், தென்னிலை சாலையில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, சின்னதாராபுரம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. பள்ளிக்கு சைக்கிள், நடந்து செல்லும் மாணவ, மாணவியர் சாலையை கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் பள்ளி விடும் நேரத்தில் மாணவ, மாணவியர் வீட்டிற்கு செல்லும் ஆர்வத்தில், வேகமாக வெளியே வருகின்றனர். அப்போது சாலையில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் நலன் கருதி, தென்னிலை சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் தொடங்கும், முடியும் நேரங்களில் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை