உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போலியாக தாசில்தார் கையெழுத்திட்டு பத்திர பதிவுக்கு முயன்றவர் தலைமறைவு

போலியாக தாசில்தார் கையெழுத்திட்டு பத்திர பதிவுக்கு முயன்றவர் தலைமறைவு

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அருகே, தாசில்தாரின் கையெழுத்தை போலியாக போட்டு, பத்திர பதிவு செய்ய முயன்றவரை, போலீசார் தேடி வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியை சேர்ந்தவர் கோபால், 86; இவர் கடந்த மாதம், 26 ல் பாப்பிரெட்டிப்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில், நிலத்தை பத்திரப்பதிவு செய்ய சென்றார். அப்போது, நிலத்தின் அனுபவ சான்றிதழில், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தாரின் அலுவலக முத்திரையை, போலி ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் போலியாக தாசில்தாரின் கையொப்பமிட்டு, பத்திரப்பதிவு செய்ய முற்பட்டுள்ளார்.இதையறிந்த பத்திர பதிவு அலுவலக அதிகாரிகள், தாசில்தார் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர், தன் போலி க‍ையெழுத்துடன் பத்திர பதிவு செய்ய முயன்ற, கோபால் மீது நடவடிக்கை எடுக்க, ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் படி போலீசார், நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து, தலைமறைவான கோபாலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ