மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
12 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
12 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
12 hour(s) ago
தர்மபுரி-தர்மபுரி, பாரதிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மண்டல தலைவர் முரளி தலைமை வகித்தார். இதில், 15வது ஊதிய ஒப்பந்தத்தை உருவக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். ஓய்வு பெற்றவுடன் அனைத்து பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், ஒப்பந்த பலன்கள், ஓய்வூதிய உயர்வு, பணியிலுள்ள தொழிலாளர்களுக்கு இணையாக டி.ஏ., வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து, மற்ற துறைகளில் வழங்கப்படும் மருத்துவக் காப்பீடு, தனியார் மய மற்றும் கான்ட்ராக்ட் முறையை முறியடிக்க வேண்டும். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை பெறவும், வாரிசு வேலையை உறுதி படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மண்டல பொதுமேலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் நாகராசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago