உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தொடர் விபத்தால் மஞ்சவாடி கணவாயில் போக்குவரத்து நெரிசல்

தொடர் விபத்தால் மஞ்சவாடி கணவாயில் போக்குவரத்து நெரிசல்

பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி முதல், சேலம் வரை, 4 வழி சாலை அமைக்கப்படுகிறது. இதில் முதற்கட்டமாக வாணியம்பாடி முதல், அரூர் ஏ.பள்ளிப்பட்டி வரை, 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய அரசு, 169.67 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டி முதல், மஞ்சவாடி வரை, 4 வழி சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்து போக்குவரத்து நடந்து வருகிறது.இந்நிலையில் மஞ்சவாடி கணவாய் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனம் மீது, லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று அதிகாலை, 6:30 மணி முதல், 7:30 மணி வரை மஞ்சவாடி கணவாய் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சாலையில் இருபுறமும் நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடந்த சில மாதங்களாக மஞ்சவாடி கணவாய் பகுதியில் லாரி மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே மஞ்சவாடி கணவாய் பகுதியில் தொடர் விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை