உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சர்வதேச யோகா தினத்தையொட்டி அரசு செவிலியர்களுக்கு பயிற்சி

சர்வதேச யோகா தினத்தையொட்டி அரசு செவிலியர்களுக்கு பயிற்சி

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அரசு மகப்பேறு உதவி செவிலியர் பயிற்சி பள்ளியில், வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு தலைமையில், சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில், பஞ்சப்பள்ளி யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரித்திவிராஜ், தனக்கும்- சமூகத்திற்கும், 'யோகா' என்ற தலைப்பில், உதவி செவிலியர் பயிற்சி பெறும் மாணவியருக்கு யோகா பயிற்சியை வழங்கினார். இவர்களுக்கு, வஜ்ராசனம், சவாசனம், முத்திரை பயிற்சி, மூச்சுப்பயிற்சி, எளிய வகை தியான பயிற்சி, இயற்கை மருத்துவ குறிப்புகள், ஆரோக்கியம் மற்றும் நினைவுத்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில், 50க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பயிற்சி பெற்றனர்.ஒவ்வொரு வாரமும் வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை, செவிலியர் மாணவியருக்கு யோகா பயிற்சி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில், தாய் சேய் நல அலுவலர்கள் சுகன்யா, ஜெயந்தி, சின்னப்பொண்ணு, கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி