உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கேலோ இந்தியா போட்டி தமிழக மகளிர் கபடி அணிக்கு பயிற்சி

கேலோ இந்தியா போட்டி தமிழக மகளிர் கபடி அணிக்கு பயிற்சி

தர்மபுரி: கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்கும், தமிழக பெண்கள் கபடி அணிக்கு, தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டது.கேலோ இந்தியா போட்டிக்கான தேசிய அளவிலான, விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடக்க உள்ளது. இதில் கபடி போட்டி ஜன., 28ல் சென்னையில் நடக்கிறது. 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவிகளுக்கான தேசிய அளவிலான கபடி போட்டி நடக்கிறது. இப்போட்டியில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மாணவிகள் பங்கேற்கின்றனர்.இதில் பங்கேற்கும் மாணவி களுக்கான பயிற்சி கடந்த, 5 தேதி முதல் தர்மபுரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கு உடற்பயிற்சி, தொடர் ஓட்ட பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில், தமிழக அணியின் பயிற்சியாளர் பியாரா, நதியா மற்றும் மேலாளர் சாந்தி ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், 'தமிழக அணியில் கோவை, மதுரை, திருச்சி, சென்னை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தேர்வாகியுள்ளனர். கேலோ இந்தியா போட்டிக்கான தேசிய அளவிலான, விளையாட்டு போட்டிகள் ஜன., 19 முதல் 31 வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்குபெறும், 12 கபடி வீராங்கனைகள் தர்மபுரி பயிற்சியில் பங்கேற்கின்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை