உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / திடக்கழிவு மேலாண்மை மையத்தில் பயிற்சி

திடக்கழிவு மேலாண்மை மையத்தில் பயிற்சி

அதியமான்கோட்டை: தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நாளொன்றுக்கு, 450 கிலோ அளவுக்கு குப்பை தரம் பிரிக்கப்படுகிறது. இந்த உரங்களை நல்லம்பள்ளி தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் வாங்கி வருகின்றனர். இந்த உரம் தயாரிக்கும் மையத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம், அதியமான் வேளாண் கல்லுாரி மாணவர்கள் பார்வையிட்டு, தரம் பிரித்தல் மற்றும் உரம் தயாரிக்கும் முறையை கண்டனர். இதில், பல்வேறு வகையான உரம் தயாரிக்கும் முறை மற்றும் குப்பை தரம் பிரித்தல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதியமான்கோட்டை பஞ்., தலைவர் திருவருட்செல்வன், ஊரக திட்ட மேலாண்மை துணை இயக்குனர் மற்றும், 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை