மரக்கன்று நடும் விழா
பென்னாகரம்: பென்னாகரம் வட்ட சட்டப் பணிக்குழு சார்பாக நீதித்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, வனத்துறை இணைந்து, மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நீதிபதி நாகலட்சுமி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். அப்போது இயற்கை வளங்களை பாதுகாத்தல், புவி வெப்பமடைவதை தடுத்தல், இயற்கையோடு இணைந்து வாழ்வது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பென்னாகரம் தாசில்தார் பிரசன்ன மூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் சுருளிநாதன், ஒகேனக்கல் ரேஞ்சர் ராஜ்குமார், வழக்கறிஞர்கள், தொண்டு நிறுவனங்கள் இயற்கையை காப்போம், நேசம், ஸ்ரீ தேவி, அறம் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிறந்த நாள், திருமண நாள் போன்ற தினங்களில் மரக்கன்றுகள் நடுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.