உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அருர் அருகே குடிநீர் வழங்ககோரி கிராம மக்கள் மறியல் போராட்டம்

அருர் அருகே குடிநீர் வழங்ககோரி கிராம மக்கள் மறியல் போராட்டம்

அரூர் : அரூர் அருகே, முறையாக குடிநீர் வழங்ககோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொளகம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட ஆண்டிபட்டிபுதுாரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து, இரு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, அதிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக, ஒரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறையாக குடிநீர் வருவதில்லை. மேலும், சிலர் பிரதான குழாயில் இருந்து வேறு குழாய் அமைத்து தண்ணீரை பிடித்து வருவதால், மற்ற பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை.இது குறித்து பஞ்., நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த கிராமமக்கள் நேற்று காலை, 7:00 மணிக்கு அரூர் - கடத்துார் சாலையில், ஆண்டிப்பட்டி புதுார் பஸ் நிறுத்தத்தில், காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியலால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை