உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / போலீஸ் பாதுகாப்புடன் சென்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

போலீஸ் பாதுகாப்புடன் சென்ற ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், 314 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. தாலுகா அலுவலகத்தில் இருந்து, ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி, நேற்று கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் செர்லி ஏஞ்சலா முன்னிலையில் நடந்தது. இதில், 376 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 376 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 408 வி.வி.,பேட் மற்றும் ஓட்டுப்பதிவிற்கு தேவையான பொருட்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு, ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, அனுப்பப்பட்டன. துணை ராணுவ படை, கமாண்டோ படை மற்றும் போலீசார் பாதுகாப்பிற்கு சென்றனர்.அப்போது, தாசில்தார்கள் சரவணன், பெருமாள், கனிமொழி, தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம், ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை