உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆலாபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

ஆலாபுரம் ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது ஆலாபுரம் ஊராட்சி. இங்கு ஜீவா நகர், பெருமாபாளையம், துறையூர், புது ஜீவா நகர், அம்மாபாளையம், நடூர், மருக்காலம்பட்டி, நேரு நகர் கோழி மேக்கனுார் என, 9 கிராமங்கள் உள்ளன.இதில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் கோழிமேக்கனுார், நடூர், புது ஜீவா நகர், பெருமாபாளையம், ஜீவா நகர் ஆகிய கிராமங்களில் கடந்த, 2 மாதமாக ஒகேனக்கல் குடிநீர் வழங்க படவில்லை. இதனால் அக்கிராம பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் ஒகேனக்கல் குடிநீர் வழங்காததால், தினமும் பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவலம் உள்ளது. எனவே, இக்கிராம மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ