உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மனுத் தாக்கலின் போது 5 பேர் வேட்பாளருக்கு கட்டுப்பாடு

மனுத் தாக்கலின் போது 5 பேர் வேட்பாளருக்கு கட்டுப்பாடு

திண்டுக்கல்:உள்ளாட்சி வேட்பு மனுத்தாக்கலின் போது, ஐந்து பேர் மட்டுமே வேட்பாளருடன் செல்ல, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே, ஊராட்சி, வார்டு உறுப்பினர்களுக்கு வேட்புமனுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பலத்தை, மனுத்தாக்கலின் போதே நிரூபிக்க, அதிக கூட்டத்தை கூட்டுகின்றனர்.சட்டசபை தேர்தலின் போது பின்பற்றப்படும் நடைமுறைகள், உள்ளாட்சி தேர்தல் மனுத் தாக்கலில் இல்லை.இந்நிலையில் நேற்று, மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவில், 'வேட்பாளருடன், முன்மொழிபவர் மற்றும் மூன்று பேர் மனுத்தாக்கலின் போது இருக்கலாம். இதற்கு மேல் அனுமதிக்க கூடாது,' என, கூறப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று முதல் பின்பற்றப்படுகிறது.மேலும், மனு பரிசீலனையின் போது வேட்பாளருடன் முன்மொழிந்தவர் மற்றும் ஒருவர் மட்டும் அனுமதிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ