உள்ளூர் செய்திகள்

மவுன மொழிப் போட்டி

நத்தம்: -நத்தம் ஆர்.சி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மவுன மொழிப் போட்டி நடந்தது. திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மை குரு சகாயராஜ் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஜெரால்டு ஸ்டீபன் செல்வா முன்னிலை வகித்தார். நான் பார்வையாளன் இல்லை என்ற தலைப்பில் நடந்த இந்த போட்டியில் 15-க்கு மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிசு தொகை, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பிரின்ஸ்தெரசாள், துணை முதல்வர் கிறிஸ்டின் ராஜம் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை