உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ராஜீவ்காந்தியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

ராஜீவ்காந்தியை தாக்கிய 6 பேர் மீது வழக்கு

குஜிலியம்பாறை: மல்லப்புரம் ஊராட்சி போடிபட்டியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி38. அங்குள்ள முத்தாலம்மன்,பெருமாள் கோயிலுக்கு பரம்பரை அறங்காவலராக 2017ல் ஹிந்து சமய அறநிலைத்துறையால் நியமிக்கப்பட்டார். இதே பதவிக்கு ராஜீவ் காந்தியின் தந்தை அமல்ராஜ் ஆதரவளார்களுக்கும், சின்னச்சாமி ஆதரவாளர்களுக்கும் 50 வருடங்களாக பகை இருந்தது. நீதிமன்றத்தில் வழக்கு நடந்த நிலையில் ராஜீவ் காந்தி குடும்பத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஹிந்து அறநிலைத்துறைக்கு புகைப்படம் அனுப்ப ராஜீவ் காந்தி,அலைபேசியில் கோயில்களை போட்டோ எடுத்து வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த வேலுச்சாமி,அவரது மகன்கள் இளையராஜா, அருள் முருகன் ஆகியோர் ராஜீவ் காந்தியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதில் அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் சம்பவத்தில் ஈடுபட்ட மயில் வாகனன், சரவண பாண்டியன், வேலுச்சாமி, கலாநிதி, இளையராஜா, அருள் முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ