| ADDED : ஜூலை 05, 2024 05:59 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் நடந்த குறைதீர் முகாமிற்கு அழைக்கவில்லை என மா.கம்யூ.,கவுன்சிலர் ஜோதிபாசு கமிஷனர்,மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் மேயர் இளமதி தலைமையில் நடந்தது. கமிஷனர் ரவிச்சந்திரன்,பொறியாளர் சுப்பிரமணியன்,உதவி கமிஷனர் வரலட்சுமி முன்னிலை வகித்தனர். 48 வார்டுகளை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் குடிநீர்,நிலவரி,வீட்டுவரி,சேதமான ரோடுகள்,அடிப்படை தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக மனு கொடுத்தனர். பெற்றுக்கொண்ட மேயர்,கமிஷனர் 1 வாரத்திற்குள் அனைத்து பகுதிகளிலும் நேரில் ஆய்வு செய்து சரி செய்து தரப்படும் என உறுதியளித்தனர். முகாம் நடந்தபோது மா.கம்யூ.,கவுன்சிலர் ஜோதிபாசு கவுன்சிலர்கள் யாருக்கும் அழைப்பு கொடுக்கவில்லை. இது தவறு என கமிஷனர்,மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வருவாய்த்துறை,சுகாதாரபிரிவு அலுவலர்கள் சமாதானம் செய்தனர். அரை மணி நேரத்தில் சான்று
திண்டுக்கல் நொச்சிஓடைப்பட்டியை சேர்ந்தவர் லத்திகாக்கு திண்டுக்கல் கமலா நேரு மருத்துவமனையில் சில மாதகளுக்கு முன் குழந்தை பிறந்தது. குழந்தைக்காக பெயர்,பிறப்பு சான்று வேண்டும் என குறை தீர் முகாமில் கமிஷனர் ரவிச்சந்திரனிடம் மனுகொடுத்தார். மனுவை பெற்ற கமிஷனர் சான்று வழங்க சுகாதார பிரிவு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி அரை மணி நேரத்தில் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.