உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தீப்பற்றுவதை தடுக்க உதவிய மழை

தீப்பற்றுவதை தடுக்க உதவிய மழை

வடமதுரை: வடமதுரை பகுதியில் நேற்றுமுன்தினமும், நேற்றும் பெய்த மழை புல், புதர்களின் தீப்பற்றும் சம்பவங்களை தடுக்க உதவியது.வடமதுரை பகுதியில் இரு ஆண்டுகளில் போதிய மழையின்றி இப்பகுதியில் குளங்கள் நிரம்பவில்லை. கிணறுகள் வறண்டுள்ளதால் வயல்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அவற்றில் இருந்து பாசனத்திற்கு நீர் எடுக்கும் நிலையே பரவலாக அனைத்து இடங்களிலும் தொடர்கிறது. நடப்பாண்டில் மார்ச், ஏப்., ல் வடமதுரை பகுதியில் பல இடங்களில் புல், புதர்கள் கவனக்குறைவால் வைக்கப்பட்ட தீயால் எரிந்தன. தீயணைப்புத் துறையினர் வந்தே அணைக்க முடிந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இப்பகுதியில் ஓரளவு மழை பெய்தது. நேற்று மாலையும் மீண்டும் மழை பெய்தது. இதனால் தீப்பிரச்னையில் தப்பிக்கலாம் என மக்கள் நிம்மதியாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ