மேலும் செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்கள்
06-Mar-2025
நிலக்கோட்டை: தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.தமிழக ஊரக வளர்ச் சித்துறையின் கீழ் 12,618 ஊராட்சிகள் உள்ளன. 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிகின்றனர். முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர்களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி 3 கட்ட போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில இணை செயலாளர் விஜயகர்ண பாண்டியன் கூறியதாவது: காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலாளர் களை அரசின் ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றி வரும் பதிவுறு எழுத்தர்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளர்களுக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.இதனை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக 3 கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட மாக நாளை (மார்ச் 12) மாநில அளவில் தற்செயல்விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஏப். 4ல் சென்னை ஊரக வளர்ச்சி ஆணையரகத்தில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்த உள்ளோம். ஏப். 21 முதல் சென்னை ஊரக வளர்ச்சி துறை ஆணையரகத்தின் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
06-Mar-2025