உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி கையாடல்

திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.4.66 கோடி கையாடல்

திண்டுக்கல், : திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.2லட்சம் வரிப்பணத்தை இளநிலை உதவியாளர் சரவணன் கையாடல் செய்ததாக ஜூலை 4ல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், விசாரணையில் ரூ.4.66 கோடி கையாடல் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்காணிப்பாளர் உட்பட 2 பேர் மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் குடிநீர், நிலம், பாதாளசாக்கடை உள்ளிட்ட வரிகளை மாநகராட்சி வரி செலுத்தும் மையத்தில் செலுத்துகின்றனர். அன்றாடம் வரி வசூலை கணக்குபிரிவு அலுவலர்கள் சரிபார்த்து இரவில் கருவூலத்தில் வைத்து மறுநாள் காலை வங்கியில் செலுத்த வேண்டும்.இங்கு கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக திண்டுக்கல்லை சேர்ந்த சரவணன் 36 பணியாற்றினார். இவர் ரூ.2 லட்சம் வரிப்பணத்தை வங்கியில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக தெரிய வந்தது. அவரிடமிருந்து ரூ.2 லட்சத்தை திரும்ப பெற்றுகொண்டு ஜூலை 4ல் அவரை மாநகராட்சி சஸ்பெண்ட் செய்தது.சரவணன் பணிக்கு சேர்ந்ததில் இருந்து தற்போது வரை உள்ள கணக்குகளை சரிபார்க்குமாறு கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

மேலும் இருவர் சஸ்பெண்ட்

2021ல் இருந்து தற்போது வரை உள்ள கணக்குகளை சரிபார்த்தனர். 2023 ஜூனிலிருந்து தற்போது ரூ.4.66 கோடி வரிப்பணத்தை சரவணன் கையாடல் செய்தது தெரியவந்தது. வரி வசூல், வங்கியில் செலுத்தியதை கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதீஷ் ஆகியோரை கமிஷனர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சரவணனின் தந்தை மாநகராட்சியில் பணியாற்றி பணிக்காலத்தில் உயிரிழந்தார். கருணை அடிப்படையில் சரவணன் பணி நியமனம் பெற்றுள்ளார். சரவணனை கைது செய்து அவரிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரி மாநகராட்சி நிர்வாகம் எஸ்.பி.,அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ