உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தினமும் 71.23 மில்லியன் லிட்டர் குடிநீர்; ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தகவல்

தினமும் 71.23 மில்லியன் லிட்டர் குடிநீர்; ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தகவல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 31 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் 71.23 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுவதாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி தெரிவித்தார்.மேலும் அவர் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ளூர் நீர் ஆதாரங்களை கொண்ட குடியிருப்பு திட்டங்கள், குடிநீர் வடிகால் வாரியத்தால் 31 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.31 கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் தினமும் 71.23 மில்லியன் லிட்டர் குடிநீர் குடிநீர் வழங்கப்படுகிறது. கோடை காலத்தை எதிர்கொள்ள குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளவை கண்டறியப்பட்டு குடிநீர் மேலாண்மை செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குடிநீர் குறைபாடுகள் இருப்பின் 0451- - 242 7392, 98434 70586ல் அணுகலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை