உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வைக்கோல் லோடு வாகனங்களில் உயர கட்டுப்பாடு இன்றி விபத்து

வைக்கோல் லோடு வாகனங்களில் உயர கட்டுப்பாடு இன்றி விபத்து

வடமதுரை, : வைக்கோல் ஏற்றும் வாகனங்கள் மோட்டார் வாகன விதிமுறைகளை பின்பற்றி அளவான உயரத்திற்குள் பாரம் ஏற்றி செல்வதை போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.பல மாவட்டங்களில் இருந்து அதிகளவில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு லாரிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்குள் வருகின்றன. கிராமங்களுக்குள் செல்லும்போது மின்ஒயர்களில் உரசி தீவிபத்துகள் ஏற்படுகின்றன. சமீபத்தில் வடமதுரை மூனாண்டிபட்டி சென்ற வைக்கோல் லாரி மின் ஒயரில் உரசி தீக்கிரையானது. வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ' வைக்கோல்களை ஏற்றும்போது பண்டில் போல் சுற்றி ஏற்ற வேண்டும். இதர பாதுகாப்பு அம்சங்களான சிகப்பு பிரதிபலிக்கும் பட்டைகள், பிரேக் லைட், முகப்பு விளக்கு அனைத்தும் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை உறுதி செய்து வாகனங்களை இயக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ