உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செஸ் போட்டியில் சாதித்த அக் ஷயா பள்ளி

செஸ் போட்டியில் சாதித்த அக் ஷயா பள்ளி

ஒட்டன்சத்திரம் : மதுரை சகோதயா பள்ளிகளின் சார்பாக நடந்த செஸ் போட்டியில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.வயதுகளின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் இருபதுக்கு மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். 12 வயது பிரிவில் இப்பள்ளியில் 6ம் வகுப்பு மாணவி விருத்திகா வர்ஷினி முதல் பரிசு , 17 வயது பிரிவில் 10ம் வகுப்பு மாணவன் ரித்திக் சரண், 19 வயது பிரிவில் 12 ம் வகுப்பு மாணவன் புகழ்முருகன் முதல் பரிசை வென்றனர். பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை