உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத ரூ.1.57 லட்சம் சிக்கியது

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத ரூ.1.57 லட்சம் சிக்கியது

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் உள்ளாட்சி நிதி தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத ரூ.1.57 லட்சத்தை கைப்பற்றினர்.திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 306 ஊராட்சிகள் இருக்கின்றன. இதன் வருடாந்திர வரவு செலவு கணக்குகளை திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்வார்கள்.இரண்டு நாட்களாக அப்பணி நடந்தது. இதையடுத்து ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளின் வரவு செலவு கணக்கு தணிக்கை செய்வதற்கு உள்ளாட்சி நிதி தணிக்கை பிரிவு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு 7:00 மணிக்கு உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குனர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். கணக்கில் வராத ரூ. 1.57 லட்சம் சிக்கியது. 4 மணி நேரத்திற்கு மேலாக அங்கு பணிபுரியும் அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட 20க்கு மேற்பட்டோரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் அலுவலர்களை வீட்டுக்கு செல்ல போலீசார் அனுமதிக்காததால் கவலையோடு காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
மே 28, 2024 06:51

இதைவிட பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிகமாக கிடைக்கும் கீழ்மட்டத்திலிருந்து திராவிட மாடல் வரை பாய்வதால் இதை மட்டும் கண்டு கொள்வதில்லை


முக்கிய வீடியோ