| ADDED : ஜூன் 11, 2024 11:47 PM
திண்டுக்கல்,: அரசு, அரசு உதவி பெறும் தனியார் பள்ளியிலே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியமாக உள்ளது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக உதவித் தொகைகள், ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உதவி, ஊக்கத்தொகை அனைத்தும் மாணவர்களுக்கும் குறித்த நேரத்தில் முறையாக சென்று சேருவதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் மூலம் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.ஆதார் பதிவு என்ற திட்டத்தின் கீழ் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் , தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பள்ளியிலே ஆதார் எண் பெறுவதற்கு பதிவு ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வட்டார மையங்களில் உள்ள 1326 அரசு, 322 அரசு உதவி பெறும், 331 தனியார் என 1,979 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெற இத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன.இங்கு புதிய ஆதார் விண்ணப்பித்தல், பயோ-மெட்ரிக் புதுப்பித்தல், ஆதார் திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் ,ஆதார் மைய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.