உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் பக்ரீத் கொண்டாட்டம்

திண்டுக்கல்லில் பக்ரீத் கொண்டாட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டடப்பட்ட நிலையில் பள்ளி வாசல்களில் முஸ்லிம்கள் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.திண்டுக்கல் - மதுரை ரோட்டில் உள்ள பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாம் முகமது ரபீக் பயான் தலைமையில் காலை 8:00 மணிக்கு பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்புத் தொழுகையில் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி பக்ரீத் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான குர்பானி நிகழ்ச்சியும் நடந்தது. திண்டுக்கல் பகுதியில் உள்ளமுஹம்மதியாபுரம் பள்ளிவாசல்,மஸ்ஜிதே சத்தார் பள்ளிவாசல், சந்து கடை பள்ளிவாசல், ஈசநத்தம் ஜூம்மா பள்ளிவாசல் என பல பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.*ஆத்துார், சித்தையன்கோட்டை பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. சித்தையன்கோட்டை ஈதுகா மைதானத்தில் நடந்த தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆத்துார், சின்னாளபட்டி பள்ளிவாசல்களில் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த பலர் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் நண்பர்கள், சுற்றத்தாருடன் குர்பானி வழங்கி வாழ்த்து பரிமாறிக்கொண்டனர்.நத்தம்: கோவில்பட்டி கோரிமேடு ஈத்கா மைதானத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வந்து சிறப்பு தொழுகை நடத்தினர். துவா எனும் பிரார்த்தனையில் உலக நன்மை,மழை வேண்டியும் தொழுகை நடத்தப்பட்டது. வத்திபட்டி, பரளி, பெரியூர்பட்டி, கோசுகுறிச்சி, மேலமேட்டுப்பட்டி, சமுத்திராபட்டி, சிறுகுடி, கோட்டையூர், சாணார்பட்டி, வேம்பார்பட்டி, கணவாய்ப்பட்டி, மருநுாத்து, டி.பாறைப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். * ஒட்டன்சத்திரம் வடக்கு பள்ளி வாசல், டவுன் பள்ளிவாசல் ,தர்ஹா பள்ளி வாசல், மதினா பள்ளிவாசல், ரஹ்மானியா பள்ளிவாசல், சாலைப்புதுார், ஜவ்வாதுபட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை, விருப்பாட்சி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.* பழநி பெரிய பள்ளிவாசலிருந்து ஊர்வலமாக வந்து சண்முக நதிக்கரை அருகே உள்ள பள்ளிவாசலில் காலை 8:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. ஏராளமானோர் பங்கேற்ற இதில் ,நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !