உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மலையாண்டி சுவாமி சிலை பிரதிஷ்டை

மலையாண்டி சுவாமி சிலை பிரதிஷ்டை

சாணார்பட்டி : திண்டுக்கல் அருகே கவசனம்பட்டி தோட்ட மலையாண்டிசுவாமி கோயிலில் சுவாமி சிலை பிரதிஷ்டை விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இதையொட்டி தோட்ட மலையாண்டி சுவாமி கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் திருச்செந்துார், ராமேஸ்வரம், அழகர் கோயில், வைகை, காவிரி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து தீர்த்த குடங்கள் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அனுக்ஞை, விக்னேஸ்வர்பூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, ஜெபஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் ஊநடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க தோட்ட மலையாண்டி சுவாமி, கன்னிமார் தெய்வங்களுக்கு கண் திறக்கப்பட்டது. அப்போது கருடர்கள் வானத்தில் வட்டமிட பக்தர்கள் பக்தி கோஷமிட்டனர். இதை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ