உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பழநி : பழநி அடிவாரம் ஆக்கிரமிப்புகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் படி அகற்றப்பட்டது. சாலையோர வியாபாரிகள் கிரிவீதியில் அனுமதிக்கப்படுவதில்லை. அடிவாரம் பகுதியில் உள்ள அங்கீகாரம் இல்லாத பட்டா இடங்கள் குறித்து நீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது.இதனிடையே என் மண் என் உரிமை மீட்பு குழு சார்பில் வி.எச்.பி., திருமடங்கள், திரு கோயில்கள் பாதுகாப்பு மாநில அமைப்பாளர் செந்தில் தலைமையில் ஹிந்து அறநிலையத்துறை , தமிழக அரசின் கவனத்தை ஈர்த்து பழநி அடிவாரம் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், ஹிந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார் ஹிந்து முன்னணி பாலன், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை