உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாழ்பட்ட பூங்காவில் பாழாகும் உபகரணங்கள்

பாழ்பட்ட பூங்காவில் பாழாகும் உபகரணங்கள்

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மின்மயானம் அருகே உள்ள மாநகராட்சி பூங்கா பயன்பாடின்றி பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. பூங்காவிலிருக்கும் விளையாட்டு உபகரணங்களும் துருபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி கர்ப்பிணிகள்,குழந்தைகள் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல புகார்கள் கொடுத்தபோதிலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. தற்போது கோடை காலம் தொடங்கியிருப்பதால் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் எல்லா குழந்தைகளும் வீட்டில் இருக்கின்றனர். மாலை நேரத்தில் அவர்கள் விளையாடும் வகையில் பூங்காவை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..........விரைவில் பயன்பாட்டிற்கு வரும்திண்டுக்கல் ஆர்.எம்.காலனி மின்மயானம் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.ரவிச்சந்திரன்,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல்............


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ