மேலும் செய்திகள்
எம்.பி., திகைப்பு; மேயர் தவிப்பு
18-Feb-2025
வடமதுரை: ''மனதை பாதிக்கும் 'டிவி' தொடர்களை பார்க்க வேண்டாம்'' என கர்ப்பிணிகளுக்கு வேடசந்துார் தி.மு.க.,எம்.எல்.ஏ., காந்திராஜன் அறிவுரை வழங்கினார்.வடமதுரையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் அவர் பேசியதாவது: கர்ப்பிணிகள் மனதை பாதிக்கும் 'டிவி' தொடர்களை பார்க்க வேண்டாம். மகிழ்ச்சியான விஷயங்கள், இசை, அவரவர் மத பாடல்களை கேட்கலாம். மனதை பாதிக்கும் எந்த விஷயமும் வயற்றில் வளரும் குழந்தையிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற விழாக்களில் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் பேசுவதை காட்டிலும் டாக்டர்களும் பங்கேற்று சிறந்த கருத்துகளை கர்ப்பிணிகளுக்கு தெரிவிக்க வேண்டும் '' என்றார். திட்ட அலுவலர் செல்வி வரவேற்றார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், பொறுப்பாளர் பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, சொக்கலிங்கம், வட்டார காங்., தலைவர் ராஜரத்தினம் பங்கேற்றனர். 100 கர்ப்பிணிகளுக்கு எம்.எல்.ஏ., சார்பில் சேலை, அரசு சார்பில் வளையல், பழங்கள், பூ உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள், பல வகை கலவை சாதம் வழங்கப்பட்டது.
18-Feb-2025