திண்டுக்கல்: ''தி.மு.க., ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. போதைப்பொருள் சந்தைக்களமாக மாறி தமிழகம் போதை மாநிலமாக திகழ்வதோடு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக,'' முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில்கள்ளச்சாராயதை தடுக்க பொன்னகரத்தில் நடந்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது: கள்ளச்சாராயத்தினால் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு தமிழக மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு வருகிறதுதி.மு.க., ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ அப்பொதெல்லாம் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிர் இழந்த கொடூரமான சம்பவம் நடந்து உள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் தாராளமாக கிடைத்து வருகிறது. போதை பொருட்களின் சந்தைக்களமாக தமிழகம் மாறி போதை மாநிலமாக திகழ்கிறது. ஆளுங்கட்சியின் ஒத்துழைப்போடும் தயவுடன் தான் இது போன்று கள்ளத்தனமாக விற்க படுகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது.போதைப்பொருள் தலைவிரித்து ஆடுவதால் எங்கு பார்த்தாலும் கொலை ,கொள்ளை அதிகரித்து வருகிறது. அரசியல் கட்சி தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை. மக்களின் உயிருக்கும் உடமைக்கும் தி.மு.க., ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போய் உள்ளதை சட்டசபையில் எடுத்துக் கூற குரல் எழுப்பினால் வெளியேற்றம் செய்கின்றனர். விரைவில் இந்த ஆட்சிக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றார். கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாநில ஜெ., பேரவை இணைச் செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், சுப்பிரமணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் யூசுப் அன்சாரி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், அம்மா பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் மகாராஜன், ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி முருகராஜ், ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முனிசாமி, அம்மா பேரவை செயலாளர் நாகராஜ், இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் அழகு மணிகண்டன், இலக்கிய அணி செயலாளர் ராஜ், எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலாளர் மாரிமுத்து, இளைஞரணி துணைச் செயலாளர் கணேசன், இளைஞர் பாசறை செயலாளர் ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டனர்