உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நத்தம் ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நத்தம் ; பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி நத்தம் ஆட்டுச் சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.நத்தத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆட்டுச்சந்தை நடக்கிறது. வழக்கமாக இங்கு ரூ. லட்சங்களில் மட்டுமே ஆடு விற்பனை நடக்கும். வரும் ஜூன் 17 பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி நேற்று திண்டுக்கல், மதுரை, காரைக்குடி,தேனி,கரூர்,சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடுகளை வாங்க ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். முகூர்த்த நாட்களும் வருவதால் ஆடுகளை வாங்குவதற்கு நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நத்தம் ஆட்டு சந்தை கூடியது. இதில் அதிக அளவில் விற்பனை செய்ய ஆடுகள் கொண்டு வரப்பட்டது. இதில் அதிக எடை கொண்ட ஆடுகள் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று மட்டும் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை